Rare Informations About Velu Nachiyar in Tamil

அறியப்படாத புரட்சி – வேலுநாச்சியார்
இன்றைய வரலாறு புத்தகங்களில் பேரரசர்களும், ஆங்கிலேயர்களும் மட்டுமே அதிகம் பேசப்படுகிறார்கள். ஆனால், இந்திய சுதந்திர போராட்டத்தின் ஆரம்பக் கால கட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் ஆயுதம் எடுத்து களத்தில் இறங்கியவர் ஒரு பெண் என்பதில் பெரும்பாலானவர்களுக்கு தெரியாத உண்மை இருக்கிறது. அந்த புரட்சி மகள்தான் வேலுநாச்சியார்.
1730-ஆம் ஆண்டு, ராமநாதபுரத்தில் பிறந்த வேலுநாச்சியார், சிறு வயதிலேயே பல்வேறு மொழிகளிலும் கல்வி கற்றார். தமிழ், உருது, ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் என மொழிகளைக் கற்றதோடு, போர்க்கலைகளிலும் தேர்ந்தவர். சிலம்பம், வலரி, வாள் சண்டை, குதிரை சவாரி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார். சுதந்திரத்தின் அர்த்தத்தை, ஆட்சியின் பின்னணியில் இருந்தும் உணர்ந்தவளே வேலுநாச்சியார்.
1772-ல், தனது கணவர் முத்துவடுகநாத தேவர் ஆங்கிலேயர்களால் சதி செய்து கொல்லப்பட்டதும், வேலுநாச்சியார் தன் உயிரை காப்பாற்றி சில ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்தார். ஆனால் அந்த நேரம், தற்காத்துக்கொள்ள மட்டும் இல்ல — எதிரியை அடைய நன்கு திட்டமிடும் காலமாகவும் மாறியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, தன் உற்சாகப்படைகளுடன் திரும்பி வந்து சிவகங்கை மீட்புப் போரை தொடங்கியபோது, இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.
வேலுநாச்சியார் எந்த ஆண்டு பிறந்தார்?
Ans : 1730
வேலுநாச்சியார் பிறந்த ஊர்?
Ans : ராமநாதபுரம்
சிவகங்கை அரசை ஆட்சி செய்த முதல் பெண் யார்?
Ans : வேலுநாச்சியார்
வேலுநாச்சியாரின் கணவர் யார்?
Ans : முத்துவடுகநாத தேவர்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய இந்தியாவின் முதல் பெண்மணி யார்?
Ans : வேலுநாச்சியார்
வேலுநாச்சியார் எந்த ஆண்டு சிவகங்கையை மீட்டார்?
Ans : 1780
வேலுநாச்சியார் சிவகங்கையை ஆட்சி செய்த காலம்?
Ans : 1780–1790
வேலுநாச்சியார் பயன்படுத்திய போர்முறைகள் எவை?
Ans - குவாரில்லா போர், இரவு தாக்குதல், மறைமுக ஆய்வுகள்.
வேலுநாச்சியாரின் மகளின் பெயர் என்ன?
Ans : வெள்ளச்சி நாச்சியார்
வேலுநாச்சியார் யாருடன் கூட்டணி அமைத்தார்?
Ans : மைசூர் ஹைதர் அலி
ஹைதர் அலி வேலுநாச்சியாருக்காக கட்டிய அரண்மனை எங்கு உள்ளது?
Ans : திண்டுக்கல்
வேலுநாச்சியாரின் படையில் பெண்கள் மட்டும் கொண்ட உளவுத்துறை என்ன?
Ans : உடையாள் படை
British ஆயுதக் கிடங்கை அழித்த வீர மங்கை யார்?
Ans : குயிலி
‘மனித குண்டு’ என வரலாற்றில் அறியப்படுபவர் யார்?
Ans : குயிலி
வேலுநாச்சியார் வாழ்ந்த காலத்தில் ஆட்சி செய்த ஆங்கிலேய கம்பெனி?
Ans : East India Company
வேலுநாச்சியார் எத்தனை மொழிகளை அறிவார்?
Ans : ஐந்து மொழிகள் (தமிழ், ஆங்கிலம், உருது, பிரெஞ்சு, சமஸ்கிருதம்)
வேலுநாச்சியார் எந்த ஆண்டு இறந்தார்?
Ans : 1796
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness
- Links